பேரன்புள்ள சிறப்பு குழந்தைகளின் பெற்றோர்களுக்கும், சிறப்பு ஆசிரியர்களுக்கும், சிறப்பு குழந்தைகளின் மேல் அக்கறையுள்ள அனைத்து நல் உள்ளங்களுக்கும்,
நான் “பேரன்பு” திரைப்படத்தை,
எனது 15வயது சிறப்பு குழந்தையும்,
25 சிறப்பு ஆசிரியர்களும்,33 சிறப்பு பெற்றோர்களும், 25 சிறப்பு குழந்தைகளமாய (83 பேர்) நேற்று மதுரையில் ARSH திரை அரங்கில் சென்று பார்த்தேன்.
இதை ஒரு திரைப்படம் என்று சொல்வதைவிட என்னை போல் Tean Age சிறப்பு குழந்தயின் பெற்றோரின் வலியையும், தவிப்பையும், எங்களின் குறைந்த பட்ச சமூகத்திடம் எதிர்பார்பையும் யதார்தமாய் சொல்லும் காவியம் என்றால் அது மிகை இல்லை.
ஒரு சிறப்பு
குழந்தையின் தந்தை என்ற முறையிலும்,
சுமார் 1500 சிறப்பு குழந்தைகளுடன், சிறப்பு ஆசிரியராக பணியாற்றியவன்,
என்ற முறையிலும்,
Director ராம் அவர்களுக்கும்,
தயாரிப்பாளர் அவர்களுக்கும், திரைப்படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும்,
எனது உணர்வு பூர்வமான நன்றியையும் வணக்கத்தையும், சொல்லிக்கொள்ள கடமைப் பட்டுள்ளேன்.
👏👏👏👏👏🙏🙏🙏
எனது பார்வையில். “பேரன்பு”
எனது வலது புறம் எனது மகனும், இடது புறம் 18 வயதுள்ள சிறப்பு குழந்தை யும் அமர்ந்திருந்தனர்.
சாதாரணமாக திரைப்படம் பார்க்கும் போது கொஞ்ச நேரம் சென்றவுடன் என் மகன் தகராறு செய்வார், அனால் நேற்று பாப்பா charactor ஐ மிகவும் உன்னிப்பாக கவனித்து அமைதியாக அமர்ந்து படம் பார்த்தார். ( 25 குழந்தைகளும் pin drop silance ல் படம் பார்த்தனர்.)
சிறப்பு குழந்தைகள் அனைவரும் தங்களை ப்பற்றிய படம் திறையில் தோன்றுவதை புரிந்து கொண்டனர் என்பதை என்னால் உணர முடிந்தது.
Tean Age சிறப்புக் குழந்தைகள்,, அந்த பருவ வயதில் படும் அவஸ்தையை நேரில் பார்த்தவன் என்பதால், நானும் என் மகன் எனது அருகில் படுத்திருக்கும் போது அவன் படும் அவஸ்தைகலுக்காக அழுது, வடிகால் தேடி ஒடியவன் என்பதால்,
திரை பாடத்தில் என்னை நான் பார்த்தேன்,என் கண்கள் குலமயின.
( என் மனைவிக்கு கூட நான் என் மகனை பார்த்து இரவில் அழுத விசயம் இந்த நிமிடம் வரை தெரியாது.)
Tean Age சிறப்பு குழந்தயின் பெற்றோர்களின் உன்மையான வலியை உலகிற்கு எடுத்து சொல்லிய Ram sir அவர்களுக்கு நன்றி சார். ( 10 வயதுக்கு கீழ் சிறப்பு குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு இது மிகயாக தோன்றலாம், ஆனால் பாடத்தில் சொல்லியுள்ள அனைத்தும் உண்மை, சத்தியம், மிகையில்லை.)
எங்கள் பள்ளியில் இருந்து திரைப்படம் பார்ப்பது Theatre ல் யாருக்கும் சொல்லவும் இல்லை,தெரியாது.
அனால் ARSH Theatre staffs, Manager எல்லோரும் மிகவும் சிறப்பாக ஒத்துழைதனர்.
எங்கள் குழந்தைகள் Interval சமயத்தில் Urine போவதற்கும் snaks சாப்பிடவும் கொஞ்சம் அதிகம் time எடுத்தனர், அனால் Theatre manager 5 நிமிடம் late அக படம் ஒட்டுமாறு operator அவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.( Thank You So Much Sir)
( சமூகமும் சிறப்பு பெற்றோர்களின் வலிகளையும், எங்கள் குழந்தைகளைப் பற்றியும் புரிந்து கொள்ள இந்த பேரன்பு படம் தான் காரணம் என்று எனக்கு தோன்றுகிறது.
நன்றிகள் கோடி ராம் சார்.
நீங்கள் நீடூடி வாழ வேண்டும் சார்.
என்னை போல் சிறப்பு குழந்தைகளின் பெற்றோர்களுக்கும், சிறப்பு ஆசிரியர்களுக்கும், சிறப்பு குழந்தைகளின் மேல் அக்கறை கொண்ட அனைவரும் இந்த திரைப்படத்தை
தயவு செய்து பாருங்கள்.
பாருங்கள்…
எங்கள் சிறப்பு குழந்தைகள் மேல் பேரான்பு செலுத்துங்கள்.
சிறப்பு குழந்தைகளுக்கு
“பேரன்பு தான் மருந்து,”
“பேரன்பு தான் Treatmen”
“பேரன்பு தான் எல்லாமும்” மற்ற அனைத்தும் இரண்டாம் பட்ஷம் தான்.
நான் எப்போதும்
“அன்புடன் ஆண்டவர்” என்றுதான் எழுதுவேன்,
ஆனால் இப்பொழுது “பேரன்புடன் ஆண்டவர்” என்று எழுத தொடங்கியுள்ளேன்.
நன்றி ராம் சார்.
இப்படிக்கு
பேரன்புடன்
ஆண்டவர் P ஜெய்தேவ்.
மதுரை.
Mobile: 9791427200
9171568733.