*
TARATDAC நத்தம் ஒன்றிய முதல் மாநாடு…*
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் நத்தம் ஒன்றிய முதல் மாநாடு நத்தத்தில் உள்ள M.M.A.திருமண மண்டபத்தில் 13.02.19 அன்று மாலை 04.00 மணிக்கு நடைபெற்றது. இருநூறுக்கும் மேற்ப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற இம்மாநாட்டில் சங்கத்தின் நத்தம் ஒன்றிய தலைவராக மோகன், செயலாளராக முபாரக், பொருளாளராக முருகேசன் ஆகியோருடன் 14 பேர் கொண்ட ஒன்றியக்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பப்பட்டனர். மாநாட்டின் நிறைவாக மாபெரும் பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இம்மாநாட்டில் சங்கத்தின் மாநில தலைவர் ஜான்சிராணி அவர்களும், சங்கத்தின் மாவட்ட செயலாளர் பகத்சிங், உயரம் தடைபட்டோர் அமைப்பின் மாநில செயலாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட மாவட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.
*மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..*
*உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரும் தீர்மானம்…*
தமிழக அரசு வருவாய்த்துறை மூலமாக 1000 ரூபாயும், கடும் ஊனமுற்ற மற்றும் மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக 1500 ரூபாயும் மாதாந்திர உதவித்தொகை வழங்கி வருகிறது. 2011ம் ஆண்டு முதல் ஆயிரம் ரூபாய் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இன்றைய விலைவாசி ஏற்றத்தில் ஆயிரம் ரூபாய் என்பது போதுமானதல்ல. எனவே, தமிழக அரசு வருவாய்த்துறை மூலமாக வழங்கும் உதவித்தொகையை 3000 ஆகவும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக வழங்கும் உதவித்தொகையை 5000 ரூபாயாகவும் மாற்றி அமைத்து அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு நத்தம் ஒன்றிய முதல் மாநாடு தமிழக அரசை கோருகிறது.
*இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க கோரும் தீர்மானம்…*
நத்தம் ஒன்றியத்தில் வீடில்லாத மாற்றுத்திறனாளிகள் பலமுறை வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தி மனு அளித்தும் இன்றுவரை நடவடிக்கை இல்லை. தமிழக அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை மட்டும் வைத்துக்கொண்டு குடும்பத்தையும் நடத்தி, வீட்டு வாடகையும் கொடுப்பது என்பது உடலில் பல்வேறு குறைபாடுகளை உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ப்புடையதல்ல. எனவே, உடனடியாக நத்தம் ஒன்றியத்தில் வீட்டு மனைப்பட்டா இல்லாத மாற்றுத்திறனாளிகளை முறையாக கணக்கெடுத்து எவ்வித நிபந்தனையும் இல்லாமல் வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டுமாறு நத்தம் ஒன்றிய முதல் மாநாடு தமிழக அரசை கோருகிறது.