மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மதுரையில் வாழும் மாற்றுத்திறனாளிகளை செல்வது மிக மிக சிரமம் வாய்ந்தது. காரணம் வெளிப் பிரகாரங்களில் மூன்று சக்கர பைக் செல்ல அனுமதி கிடையாது என்று காவல்துறையினர் மறுத்துவிடுகின்றனர்.
வரும் 24 /2 /2019 ஞாயிறு அன்று காலை 8 மணி முதல் 9 மணிக்குள்ளாக மாற்றுத்திறனாளிகள் தங்களது சக்கர நாற்காலியுடன் வருகை
புரிந்து மீனாட்சி அம்மன் திருவருளைப் பெற விடுகிறோம்.
அதற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம்.
சுமாராக நூறு மாற்றுத்திறனாளிகளுக்கு மேல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல முடிவெடுத்துள்ளோம்.
மாற்றுத்திறனாளிகள் தங்களது குடும்பம் சகிதமாக கலந்துகொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திட வேண்டுகிறோம்.
சக்கர நாற்காலி மாற்றுத்திறனாளி களிடம் இல்லை என்றால் உடனே நமது மாற்றுத்திறனாளி அலுவலகத்திடம் சென்று நமது மாற்றுத் திறனாளி அடையாள அட்டை இரண்டு புகைப்படங்களை எடுத்து சென்று கொடுத்து விட்டு சக்கர நாற்காலியை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
வருக
மீனாட்சி அம்மனின் அருள் பெறுக
இதற்கான முன்பதிவை மதுரை மாவட்ட தமிழும் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் மாவட்ட தலைவர் நாக பாஸ்கரிடம் செய்து கொள்ளவும்.
செல்:97901 92862
சொர்க்கம் ராஜா
மாநில பொதுச் செயலாளர்
தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு.
கைப்பேசி 81 90 81 90 59