* TN Govt did not follow the provisions of Rights of Persons with Disabilities Act(2016), once again, in its social security scheme.
* According to the attached RD dept. Govt order, the TN Govt did not enhanced the 25% extra amount to the disabled household family, as per section 24(1) of the RPD Law,
* And as per section 37(b) of the act, it did not reserved 5% scheme
* The responsible state commissioner for differently abled did not act, as per the provisions of the law.
* TARATDAC written a letter to the TN Chief Minister today and demand to implement the scheme with the mandates of the bare law.
மாண்புமிகு எடப்பாடி திரு.கே. பழனிசாமி அவர்கள்
தமிழ்நாடு முதலமைச்சர், சென்னை 600 009. 21.02.2019
அன்புடையீர்.. வணக்கம்.
பொருள்: சிறப்பு நிதியுதவி ரூ.2000/- ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம்-2016-ன்படி, நிதியுதவி தொகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 25% கூடுதலாக உயர்த்தியும், 5% திட்ட ஒதுக்கீட்டு அளவினை மாற்றுத்திறனாளிகள் பயன்பெற ஒதுக்கீடு செய்யக் கோருதல் – தொடர்பாக
பார்வை: ஊரக வளர்ச்சித்துறை அரசாணை எண்.19, நாள் 13.02.2019
அமலில் உள்ள ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016 தற்போது பிரிவு 24(1)-ன்படி, அரசாங்கங்கள் எந்த ஒரு சமூகநலத்திட்டம் மேற்கொண்டாலும், அத்திட்டங்களில் மற்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதைவிட, மாற்றுத்திறனாளிகளுக்கு 25% கூடுதலான அளவு உயர்த்தி வழங்க வேண்டும். அதாவது மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்களுக்கு இத்தொகையை ரூ.2500/- ஆக உயர்த்தி வழங்க வேண்டும். அதைப் போன்று சட்டப் பிரிவு 37(b)-ன்படி அரசுகள் தீட்டும் அனைத்து வறுமை ஒழிப்பு மற்றும் முன்னேற்றங்களுக்கான திட்டங்களில் அளவினை மாற்றுத்திறனாளி பெண்களுக்கு முன்னுரிமையுடன்5% திட்ட ஒதுக்கீடினை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
ஆனால், தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை பிப்-13 தேதியிட்டு வெளியிட்டுள்ள அரசாணை எண்.19-ல் மாற்றுத்திறனாளிகளுக்கான சட்ட விதிமுறைகள் கடைப்பிடிக்கவில்லை. அறிவித்துள்ள பொங்கல் நிதி மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்கும் திட்டங்களில், இந்த சட்ட விதிமுறையை தமிழக அரசு கடைப்பிடிக்கவில்லை.
மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்களை வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பிரிவினராக ஏற்றிடுக
இந்திய அரசும் கையெழுத்திட்டு ஏற்றுள்ள 2007 ஆம் ஆண்டு ஊனமுற்றோர் உரிமைகளுக்கான ஐக்கியநாடுகள் சபை கன்வென்ஷன், அரசாங்கங்கள் தீட்டும் திட்டங்கள் அனைத்திலும் மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. அதைப்போன்று சிவில் உரிமைகளின் மக்கள் சங்கம்(பியுசிஎல்) அமைப்பு தொடர்ந்த வழக்கில் 2003 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பிரிவினரில் மாற்றுத்திறனாளிகளையும் சேர்க்க வலியுறுத்தியுள்ளது.
ஆனால், மாநிலம் முழுவதும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களை கணக்கெடுக்கும் அதிகாரிகள், பல இடங்களில் மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்களை இந்த வரம்பிற்குள் சேர்க்க மறுப்பதாக செய்திகள் வருகின்றன.
எனவே, சர்வதேச விதிகளின்படியும், உச்சநீதிமன்ற உத்தரவின்படியும் மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்களை வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பிரிவினராக அறிவித்து திட்டங்களை செயல்படுத்திட எமது சங்கம் வலியுறுத்துகிறது.
மவுனம் காக்கும் மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர்
ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016 தற்போது பிரிவு 80(a & g)-ன்படி, அரசாங்கம் தீட்டும் திட்டங்களை கண்காணித்து மாற்றுத்திறனாளிகள் உரிமைகளை நிலைநாட்டுவதும், இச்சட்டத்திற்கு பொருந்தாத வகையில் அரசுகள் தீட்டும் திட்டங்களில் தன்னிச்சையாக அல்லது வேறு வகையிலோ தலையீடு செய்து சரி செய்ய வேண்டியதும் மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் கடமையாகும்.
ஆனால், தற்போதைய ஊனமுற்றோர் புதிய சட்டத்தை மதிக்காமல், தமிழக அரசு தீட்டும் திட்டங்களை கண்காணித்து, தலையீடு செய்யாமல் மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் தொடர்ந்து மவுனம் காத்து வருவது கண்டிக்கத்தக்கது. ஒவ்வொரு முறையும் சங்கம் சார்பில் நீதிமன்றம் சென்று மாற்றுத்திறனாளிகள் உரிமைகளை நிலைநாட்ட வேண்டிய அவலமே உள்ளது.
ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த மறுப்பதை, தலையீடு செய்து நடவடிக்கை எடுக்காத மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் எதற்கு என்ற கேள்வியும் எழுகிறது.
இப்படிக்கு,
(பா.ஜான்ஸிராணி) (எஸ். நம்புராஜன்)
மாநில தலைவர் பொதுச்செயலாளர்
Copy to:
(1) The Chief Secretary, Govt. of TN, Chennai-9
(2) The Additional Chief Secretary to Govt. of Tamilnadu
Rural Delveopment Department, Chennai 600 009.
(3) The Chief Commissioner for Persons with Disabilities
New Delhi, Delhi 110 001.
(4) The State Commissioner
Welfare of Differently Abled Persons Dept, Chennai 600 006.–
—
S. NAMBURAJANState General Secretary, Tamilnadu Assn for the Rights ofAll Types of Differently Abled & Caregivers – TARATDACNew No.69, VGP Road, West Saidapet, Chennai 600 015.# 044-23713161 Fax: 044-23715491 94442-95994