TARATDAC Initiative: Feb-27&28 state wide struggles on Rs.2000/- scheme issues- Post shared by TARATDAC State Gen Sec. Shri. Namburajan

PRESS RELEASE
————————
பிப்-27,28 மாநிலம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்!சிறப்பு நிதியுதவி ரூ.2000/- வழங்குவதில் ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம்-2016  விதிகளின்படி செயல்படுத்தாத தமிழக அரசை கண்டித்து!
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில நிர்வாகிக்குழு கூட்டம் பிப்22 அன்று மதுரையில் மாநில தலைவர் பா.ஜான்ஸிரானி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம் வருமாறு:
தமிழக அரசு வறுமைக் கோட்டிற்கு கீழ்வாழும் பல்வேறு வகை அமைப்பு சாரா குடும்பங்களுக்கு சிறப்பு நிதியுதவி திட்டம் என்ற பெயரில் ரூ.2000 வழங்க மாநிலம் முழுவதும் கணக்கெடுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 
இது தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பிப்-13 தேதியிட்டு  அரசாணை எண்.19ம் வெளியிடப்பட்டுள்ளது. அமலில் உள்ள ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016ன்படி,  இப்படிப்பட்ட சமூகப்பாதுகாப்பு திட்டங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு 25% கூடுதலான அளவு உயர்த்தி வழங்க வேண்டும்.  அதாவது மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்களுக்கு இத்தொகையை ரூ.2500/- ஆக உயர்த்தி வழங்க வேண்டும். அதைப் போன்று  திட்ட அளவில் 5%ஐ மாற்றுத்திறனாளி பெண்களுக்கு முன்னுரிமையுடன்   மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.  
ஆனால், இத்தகைய சட்ட விதிமுறைகளை இத்திட்டத்தில் கடைப்பிடிக்க ஊரக வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் விதிகள் உருவாக்கப்படவில்லை.  
மேலும், மாநிலம் முழுவதும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களை கணக்கெடுக்கும் அதிகாரிகள், பல இடங்களில் மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்களை இந்த வரம்பிற்குள் சேர்க்க மறுப்பதாக புகார்கள் வருகின்றன. 
இத்திட்டத்தில் மட்டுமல்ல ஏற்கனவே தமிழக அரசு அமல்படுத்திய மகளிருக்கான மானிய விலை ஸ்கூட்டர், பொங்கல் நிதி ரூ.1000 போன்ற திட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகள் சட்ட விதிமுறையை தமிழக அரசு கடைப்பிடிக்காமல், மாற்றுத்திறனாளிகள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
ஊனமுற்றோர் உரிமைகள் சட்டப்படி தமிழக அரசாங்கம் தீட்டும் திட்டங்களை கண்காணித்து மாற்றுத்திறனாளிகள் உரிமைகளை நிலைநாட்டும்
பொறுப்பில் உள்ள  மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரும் சட்டப்படி கடமையாற்றாமல், ஆளும் அதிமுக கட்சியின் தலைவரைப் போன்று,தமிழக அரசின் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு அவர் ஆதரவளிக்கும் வகையில் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார்.
ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான  சங்கம் சார்பில் ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் சென்றுதான் மாற்றுத்திறனாளிகள் உரிமைகளை நிலைநாட்ட வேண்டிய அவலம் உள்ளது. 
பிப்-27, 28 மாநிலம் முழுவதும் போராட்டம்!———————————–எனவே, தமிழக அரசின் சட்ட விரோத, மாற்றுத்திறனாளிகள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், உரிய தலையீடு செய்து உரிமைகளை நிலைநாட்ட மறுக்கிற மாநில மாற்றுத்திறனாளிகள்  நல ஆணையரை கண்டித்தும், ரூ.2000/- சிறப்பு நிதியுதவி திட்டத்தில் புதிய ஊனமுற்றோர் உரிமைகள் சட்டப்படி தமிழக அரசு செயலாற்ற வலியுறுத்தியும் மாற்றுத்திறனாளிகளை திட்டி மாநிலம் முழுவதும் பிப்-27, 28 தேதிகளில் கண்டன போராட்டங்கள் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில நிர்வாகக்குழு முடிவு செய்துள்ளது.
 பா.ஜான்ஸிராணி,         எஸ். நம்புராஜன்மாநில தலைவர்              பொதுச்செயலாளர்9444295994
  -S. NAMBURAJANState General Secretary, Tamilnadu Assn for the Rights ofAll Types of Differently Abled & Caregivers – TARATDACNew No.69, VGP Road, West Saidapet, Chennai 600 015.# 044-23713161   Fax: 044-23715491    94442-95994

General Secretary, Tamilnadu Assn for the Rights ofAll Types of Differently Abled & Caregivers – TARATDACNew No.69, VGP Road, West Saidapet, Chennai 600 015.# 044-23713161   Fax: 044-23715491    94442-95994

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s